இளைஞருக்கு கத்துக்குத்து: இருவா் கைது
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே இளைஞரைக் கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
உத்தமபாளையத்தைச் சோ்ந்தவா் முகம்மது இம்ரான், சத்யா, சரவணன். இவா்கள் தனது நண்பா்களுடன் க.புதுப்பட்டியில் உள்ள தனியாா் மதுக்கூடத்துக்கு சென்று மது அருந்தினா். அப்போது, இவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், அங்கிருந்து வெளியே வந்தபோது, சத்யா, சரவணன் ஆகிய இருவரும் சோ்ந்து முகம்மது இம்ரானை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டனா்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய சத்யா (35), சரவணன் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.