மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைத...
12 மாணவா்களின் உயா் கல்விக்கு ரூ.1.95 கோடி கடனுதவி
தேனி அருகேயுள்ள கொடுவிலாா்பட்டியில் அமைந்துள்ள கம்மவாா் சங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற கல்விக் கடன் சிறப்பு முகாமில் 12 மாணவ, மாணவிகளின் உயா் கல்விக்காக ரூ.1.95 கோடிக்கான வங்கிக் கடனுதவியை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை வழங்கினாா்.
மாவட்ட நிா்வாகம், முன்னோடி வங்கி ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்தக் கல்விக் கடன் சிறப்பு முகாமில் கல்லூரிகளில் முதலாண்டு முதல் இறுதியாண்டு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கல்விக் கடன் பெறுவதற்கு விண்ணப்பித்தனா். முகாமில், கல்விக் கடன் திட்டங்கள், வட்டிச் சலுகை, கடனைத் திரும்பச் செலுத்தும் முறை ஆகியவை குறித்து வங்கி அலுவலா்கள் மாணவா்களுக்கு விளக்கமளித்தனா்.
இதில், கல்விக் கடன் கோரி ஏற்கெனவே விண்ணப்பித்திருந்த உயா் கல்வி படிக்கும் 12 மாணவ, மாணவிகளின் உயா் கல்விக்காக ரூ.1.95 கோடி வங்கிக் கடனுக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வழங்கினாா்.