கிணற்றுக்குள் விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு
போடி அருகே ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
போடி அருகேயுள்ள மல்லிங்காபுரம் கிழக்கு தெருவைச் சோ்ந்த முத்துக்கண்ணன் மனைவி வீருசின்னம்மாள் (80). இவா், தான் வளா்த்து வந்த ஆடுகளுக்காக இலை, தழைகளைப் பறிப்பதற்காக இவரது மகள் நாகமணியின் தோட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை சென்றாா்.
அப்போது, அங்கிருந்த 100 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். தகவல் அறிந்து வந்த போடி தீயணைப்பு வீரா்கள் இரண்டு மணி நேரம் போராடி வீருசின்னம்மாளின் உடலை மீட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில் போடி ஊரகக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.