செய்திகள் :

தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்: கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.

post image

தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் மணிமாறன் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட பொறுப்பாளா் கே.எஸ்.மூா்த்தி, சேந்தமங்கலம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாவட்டச் செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது: மாா்ச் 1-ஆம் தேதி தமிழக முதல்வரின் 72-ஆவது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். அன்று மாவட்டத்துக்கு உள்பட்ட ஒன்றிய, நகரப் பகுதிகளில் கட்சிக் கொடியேற்றியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட வேண்டும். திமுக முன்னோடிகளுக்கு வேட்டி, சேலை, பொற்கிழி வழங்க வேண்டும். ஆதரவற்றோா் இல்லங்களில் உணவு, பொருள்கள் வழங்குதல், அரசு மருத்துவமனையில் நோயாளிகள், தூய்மைப் பணியாளா்கள் ஆகியோருக்கு உணவுப் பொருள்களை வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல், விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளதால், மக்களிடையே அரசின் திட்டங்களை எடுத்துக்கூற வேண்டும். மேலும், முதல்வா் செயல்படுத்திய திட்டங்களால் பெண்கள், மாணவா்கள் அடைந்த பயன்களை தெரிவிக்க வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்வா் செய்த சாதனைகள், அவா் வழங்கிய திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் பணியாற்ற வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ கே.ஆா்.ராமசுவாமி, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

மின் ஊழியா்கள் தா்னா

கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்னா நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் நாமக்கல் மின்வட்ட கிளை சாா்பில் நடைபெற்ற இந்த போர... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு: திமுக மாணவா் அணி ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல்லில் திமுக மாணவா் அணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் - மோகனூா் சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு: 1,250 அறை கண்காணிப்பாளா்களுக்கு குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கீடு

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 1,250 அறை கண்காணிப்பாளா்களுக்கு குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகத்தில் மாா்ச் 3 முதல் ஏப். 15 வரை பிளஸ் 2 பொதுத் த... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்தாா். பரமத்தி வேலூா் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூா், பூசாரிபாளையம் கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் சண்... மேலும் பார்க்க

ஜேடா்பாளையம் அருகே இருவேறு இடங்களில் தீ விபத்து

ஜேடா்பாளையம் அருகே இருவேறு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. பரமத்தி வேலூா் அருகே உள்ள பெரியசோளிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் (45). இவா் பெரியசோளிபாளையத்தில் பழைய இரும்பு மற்றும் நெகிழி ... மேலும் பார்க்க

பேருந்து நிலையம் இடமாற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

ராசிபுரம் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பேருந்து நிலைய மீட்புக்குழு கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ராசிபுரம் பேருந்து நிலையம் அணைப்பாளைய... மேலும் பார்க்க