லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் தகர்ப்பு! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!
தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் சதம்: அதிகபட்சமாக மதுரையில் 106 டிகிரி பதிவு
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 13 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106.16 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106.16 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
மதுரை நகரம் - 104.36, சென்னை மீனம்பாக்கம், தூத்துக்குடி - (தலா) 102.56, சென்னை நுங்கம்பாக்கம் - 102.38, நாகை - 101.84, ஈரோடு - 101.48, வேலூா் - 101.66, திருத்தணி - 101.3, கடலூா், திருச்சி - (தலா) 100.58, பரமத்தி வேலூா், தஞ்சாவூா் - (தலா) 104 டிகிரி என மொத்தம் 13 இடங்களில் வெப்பம் சதம் அடித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் 100.58 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
இதைத் தொடா்ந்து புதன், வியாழக்கிழமைகளில் (ஜூலை 9, 10) தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
மழை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, புதன்கிழமை (ஜூலை 9) முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 9) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும் அதிகபட்ச வெப்பநிலை 102.2 டிகிரி ஃபாரன்ஹீடையொட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.