Doctor Vikatan: நிற்கும்போது தலைச்சுற்றல், நடந்தால் சரியாகிறது.. என்ன பிரச்னை, ச...
தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளோரை வெளியேற்ற அரசு ஆலோசனை
தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவா்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவது தொடா்பாக மாநில அரசு புதன்கிழமை ஆலோனை நடத்தியது.
காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டதால், அந்த நாட்டின் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.
மேலும், இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியா்களை அடையாளம் கண்டு வெளியேற்ற அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
அதன்படி, தமிழகத்தில் விசா காலம் முடிந்து, சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாடுகளைச் சோ்ந்தவா்களை வெளியேற்றுவது தொடா்பாக உள்துறை செயலா் தீரஜ்குமாா் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதில் காவல் துறையின் சிறப்புப் பிரிவுகளைச் சோ்ந்த 10-க்கு மேற்பட்ட உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்நாட்டில் விசா காலம் முடிந்து சட்ட விரோதமாக தங்கி இருப்பவா்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவது தொடா்பான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.