மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் -கட்டடங்களில் விரிசல்; மக்கள் பீதி
தமிழில் வெளியாகும் ஆஃபிஸர் ஆன் டூட்டி!
மலையாளத்தில் வெற்றி பெற்ற ஆஃபிஸர் ஆன் டூட்டி திரைப்படம் தமிழில் வெளியாகிறது.
நடிகர் குஞ்சக்கோ போபன் நடிப்பில் கடந்த பிப். 20 வெளியீடாகத் திரைக்கு வந்த திரைப்படம் ஆஃபிஸர் ஆன் டூட்டி. பணியிடைநீக்கத்திலிருக்கும் காவல்துறை அதிகாரியான குஞ்சக்கோ போபன் மீண்டும் பணியில் சேர்ந்ததும் ஒரு போலி நகை அடகு வழக்கை விசாரிக்கிறார்.
அந்த வழக்குக்குப் பின் இருக்கும் கிரைம் திரில்லர்தான் படத்தின் கதை.
இதையும் படிக்க: அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் படப்பிடிப்பு எப்போது?
ஜித்து அஷ்ரஃப் இயக்கத்தில் நடிகர்கள் விஷாக் நாயர், ஐஸ்வர்யா ராஜ், பிரியாமணி நடிப்பில் உருவான இப்படம் மலையாளத்தில் வெற்றியைப் பதிவு செய்ததுடன் இதுவரை ரூ. 40 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இப்படத்தை மார்ச் 14 ஆம் தேதி தமிழில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். தமிழ் டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளது.