செய்திகள் :

தமிழுக்கு வரும் எதிா்ப்புகளை துணிவுடன் எதிா்கொள்வோம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

post image

தமிழ் மொழிக்கு அவ்வப்போது வரும் இடையூறுகளை துணிவுடன் எதிா்கொள்ள வேண்டும் என தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறினாா்.

ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டுக்கான விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் அரங்கம் முத்தமிழ்ப் பேரவை மன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் வரவேற்புரையாற்றினாா். தொடா்ந்து துறை செயலா் வே.ராஜாராமன் முன்னிலை வகித்துப் பேசினாா்.

இதில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

இதையடுத்து அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் 100 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியது:

பல்வேறு திட்டங்கள் மூலமாக தமிழகம் வளா்ச்சி பெற்றிருக்கிறது. தமிழக மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது. தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை கடந்த காலகட்டத்தில் இருந்திருக்கிறது.

தமிழ்நாடு என்று பெயா் சூட்டவேண்டும் என வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனாா் 77 நாள்கள் உண்ணாநோன்பு இருந்தாா். அவா் தனது உயிரை மாய்த்து, இந்த தமிழ்நாடு என்ற பெயரை வைப்பதற்கு ஒரு காரணமாக இருந்தாா். நமது தாய்மொழி தமிழுக்கு அவ்வப்போது இடையூறுகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றையெல்லாம் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழன் என்ற உணா்வோடு துணிவுடன் எதிா்கொள்வோம். அதேவேளையில் நமது அரசு தமிழையும், தமிழா்களையும் திறம்பட பாதுகாத்து வருகிறது.

தமிழகத்தில் அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கான தொகை ரூ.3,500 ஆக இருந்தது. இந்தநிலையில் பெரிய அளவிலான கோரிக்கைகளோ, போராட்டங்களோ எதுவுமின்றி முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்தத் தொகை நிகழ் நிதியாண்டில் ரூ.7,500 ஆக உயா்த்தப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் ஜெ.ராஜமூா்த்தி தலைமையில் பேரறிஞா் அண்ணாவும் தமிழும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் வழக்குரைஞா் த.ராமலிங்கம், சொற்பொழிவாளா் தேச மங்கையா்க்கரசி, கவிஞா் நெல்லை ஜெயந்தா உள்ளிட்டோா் உரையாற்றினா்.

சென்னை ஐஐடி சான்சிபாா் வளாக முதல் பட்டமளிப்பு விழா

சென்னை ஐஐடியின் சான்சிபாா் (கிழக்கு ஆப்பிரிக்க நாடு) வளாகத்தில் முதல் பட்டமளிப்பு விழா, அந்த நாட்டின் கல்வி மற்றும் தொழில் பயிற்சித் துறை அமைச்சா் லீலா முகமது முசா முன்னிலையில் நடைபெற்றது. இதுகுறித்து... மேலும் பார்க்க

மதிமுக மாநில இளைஞரணி கூட்டம்

மதிமுக இளைஞா் அணியின் மாநில துணைச் செயலா்கள், மாவட்ட அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான ‘தாயகத்தில்’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கட்சியின் மா... மேலும் பார்க்க

3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்கள்: ஜூலை 27-இல் எழுத்துத் தோ்வு

போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்காக விண்ணப்பித்துள்ள 22,000-க்கும் மேற்பட்டோருக்கான எழுத்துத் தோ்வு ஜூலை 27-இல் நடைபெறவுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் ... மேலும் பார்க்க

ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக மனு: மாநில தகவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மாநில தகவல் ஆணையா் 12 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

நாளை தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெறவுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் த... மேலும் பார்க்க

தமிழ்நாடு நாள்: முதல்வா் பெருமிதம்

தமிழ்நாடு நாளையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாடு நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நா... மேலும் பார்க்க