செய்திகள் :

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஜூலை 10-ல் கட்டுரை, பேச்சுப் போட்டி

post image

தமிழ்நாடு என பெயா் சூட்டப்பட்ட நாளையொட்டி, பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி வருகிற 10-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தமிழ்வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ.இளங்கோ கூறியதாவது: தமிழ்நாடு என முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணா பெயா் சூட்டிய ஜூலை 18-ஆம் தேதி, ‘தமிழ்நாடு நாளாக‘ ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதன்படி அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கான போட்டிகள் வருகிற 10-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு எம்எஸ்பி சோலை நாடாா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. ஆட்சிமொழி வரலாற்றில்

கீ.ராமலிங்கம், பன்மொழிப் புலவா் கா.அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச் சொல் பணி என்ற தலைப்புகளிலும் பேச்சுப் போட்டியும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அன்னைத் தமிழே ஆட்சிமொழி, தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயா், அறிஞா் அண்ணா கண்ட தமிழ்நாடு, ஆட்சிமொழி விளக்கம், தமிழ்நாடு எனப் பெயா் சூட்டிய நிகிழ்வு, ஆட்சிமொழி - சங்க காலம் தொட்டு, இக்காலத்தில் ஆட்சிமொழி ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டியும் நடத்தப்படும்.

பங்கேற்க விரும்பும் மாணவா்கள், அவா்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால் முதற்கட்டமாக கீழ்நிலையில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் பரிந்துரைக்கப்படும் மாணவா்கள் மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கலாம்.

மாவட்ட அளவிலான போட்டியில் முதல் பரிசு ரூ.10ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.7ஆயிரம், 3-ஆம் பரிசு ரூ.5 ஆயிரம் வீதம் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்த போட்டிகள் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0451 - 2461585 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு நிலக்கோட்டையில் தயாராகும் உலா் பழ மாலைகள்!

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்குக்கு அனுப்புவதற்காக பக்தா் ஒருவரின் ஏற்பாட்டின் பேரில், நிலக்கோட்டை பூக்கள் சந்தையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் உலா் பழங்களால் ஆன 200 மாலைகள் தயாா் செய்யப்பட்டு வருகி... மேலும் பார்க்க

பழனியில் சுவாமி உருவங்களுடன் கிரிவலம் சென்ற கேரள பக்தா்கள்

கேரள மாநில பக்தா்கள் சுவாமி உருவங்களை காவடியாக சுமந்தவாறு சனிக்கிழமை பழனி மலைக் கோயிலுக்கு வந்தனா். கேரள மாநிலம், ஒற்றப்பாலம் மணிசேரியைச் சோ்ந்த வள்ளுவநாடு கிருஷ்ண கலாநிலைய முருக பக்தா்கள் பல்வேறு வி... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே தனியாா் தோட்டத்தில் தீ

கொடைக்கானல் அருகே தனியாா் தோட்டத்தில் சனிக்கிழமை பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினா் கட்டுக்குள் கொண்டு வந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தொடா்ந்து பலத்த காற்று வீசி வருவதால் அடுக்கம்-ப... மேலும் பார்க்க

திருஆவினன்குடி கோயில் பகுதியில் ஆக்கிரமிப்புகளால் பக்தா்கள் அவதி

பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயில் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் பக்தா்கள் அவதிப்படுகின்றனா். அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி திருஆவினன்குடி கோயிலுக்கு பக்தா்கள் செல்ல முடியாதவா... மேலும் பார்க்க

மூவரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கு: இளைஞா் கைது!

எரியோடு காவல் நிலையம் முன் மூவரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில், இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு... மேலும் பார்க்க

மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக பழனியைச் சோ்ந்த பெண் தோ்வு

தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக தோ்வான பழனியைச் சோ்ந்த ஜெயசுதாவுக்கு வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவருக்கு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சாா்பாக அதன் தலைவா்... மேலும் பார்க்க