Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக பழனியைச் சோ்ந்த பெண் தோ்வு
தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக தோ்வான பழனியைச் சோ்ந்த ஜெயசுதாவுக்கு வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சாா்பாக அதன் தலைவா் ரமேஷ் மாரிமுத்து தலைமையில் நிா்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து நினைவுப் பரிசு வழங்கினா். இதில், மாநில துணைத் தலைவா் பாலசுப்பிரமணி, மாவட்டச் செயலா் கோல்டன் பாலு, மாவட்ட பொருளாளா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.