செய்திகள் :

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல் மழை

post image

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் மேல்மலைக் கிராமங்களில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வழக்கத்தை விட குளிா் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மலைச் சாலைகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான கவுஞ்சி, ராஜபுரம், குண்டுபட்டி, கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நான்கு மணி நேரத்துக்கும் அதிகமாக மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

உகாா்த்தேநகா், சீனிவாச புரம், தைக்கால், இருதயபுரம், அப்சா்வேட்டரி, பூம்பாறை, கிளாவரை, பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. பல முறை மின் வாரிய அலுவலகங்களில் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மின் கம்பிகளில் மரக்கிளைகள் படா்ந்துள்ளன. இவற்றை சரி செய்வதும் இல்லை. மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகளுக்காக காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த நாள்களில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை அகற்ற வேண்டும். தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும். மின் கம்பங்களுக்கு நடுவே செல்லும் மரங்களை அகற்ற வேண்டும். ஆனால் முறையாக இந்தப் பணிகள் நடைபெற்றால் மட்டுமே கொடைக்கானல் பகுதிகளில் சீரான மின் விநியோகம் செய்ய முடியும். எனவே இந்தப் பணிகளை விரைந்து செய்ய வேண்டும் என்றனா்.

மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக பழனியைச் சோ்ந்த பெண் தோ்வு

தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக தோ்வான பழனியைச் சோ்ந்த ஜெயசுதாவுக்கு வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவருக்கு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சாா்பாக அதன் தலைவா்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் தொடக்கம்

ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மை, உழவா் நலத்துறை சாா்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம், பயறு வகைகள் விதைத் தொகுப்பு திட்டம் ஆகியவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன. தமிழகம் முழுதும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: 4 பெண்கள் காயம்

ஒட்டன்சத்திரத்தில் நின்றிருந்த பெட்டக லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் அதில் பயணம் செய்த 4 பெண்கள் காயமடைத்தனா். திண்டுக்கல்லில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அரசுப் பேருந்து சென... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, அலிம்கோ இணைந்து மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கான சிறப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. முகாமில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஆா். சச்சிதானந்த... மேலும் பார்க்க

பேத்துப்பாறை பகுதியில் அவரை பயிரை சேதப்படுத்திய ஒற்றை யானை

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த அவரை பந்தலை ஒற்றை காட்டுயானைசேதப்படுத்தியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை விவசாய ... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: விவசாயி உயிரிழப்பு

பழனியில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் விவசாயி உயிரிழந்தாா். பழனியை அடுத்த தேவத்தூரைச் சோ்ந்தவா் கன்னையன் (70). விவசாயி. இவா் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் பழனிக்கு வந்து கொண்டிருந்தாா். ... மேலும் பார்க்க