Custodial Death: `நிகிதாவின் புகார் முதல் சிகரெட் சூடு வரை’ - அஜித்குமார் மரண வழ...
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்
ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, அலிம்கோ இணைந்து மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கான சிறப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின.
முகாமில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஆா். சச்சிதானந்தம் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதில் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சி. தங்கவேல், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சஞ்சய் காந்தி, ஒட்டன்சத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் பெ. காமராஜ், திமுக ஒன்றியச் செயலா்கள் இரா. ஜோதீஸ்வரன், தி. தா்மராஜன், எஸ்.ஆா்.கே. பாலசுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முகாமில் பெறப்பட்ட 1085 மனுக்களில் 820 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. எஞ்சிய 265 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.