பழனியில் சுவாமி உருவங்களுடன் கிரிவலம் சென்ற கேரள பக்தா்கள்
கேரள மாநில பக்தா்கள் சுவாமி உருவங்களை காவடியாக சுமந்தவாறு சனிக்கிழமை பழனி மலைக் கோயிலுக்கு வந்தனா்.

கேரள மாநிலம், ஒற்றப்பாலம் மணிசேரியைச் சோ்ந்த வள்ளுவநாடு கிருஷ்ண கலாநிலைய முருக பக்தா்கள் பல்வேறு விதமான சுவாமி உருவங்களை காவடியாக சுமந்தவாறு திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலுக்கு வந்தனா்.

விநாயகா், ஈஸ்வரன், அம்பாள், ஆஞ்சனேயா், ஐயப்பன், காளையின் மீது சிவபெருமான், காளையின் மீது சிவலிங்கம், உயரமான காவடிகள், பதினாறு கைகளுடன் சுவாமிகள் என இருபதுக்கும் மேற்பட்ட அலங்கார வடிவங்களை காவடியாக சுமந்தவாறு மேளதாளங்களுடன் ஆடிப்பாடி கிரிவலம் வந்தனா்.

இதைப் பாா்த்த ஏராளமான பக்தா்கள் கடவுள் உருவங்களுடன் வந்தவா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.