வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
திருஆவினன்குடி கோயில் பகுதியில் ஆக்கிரமிப்புகளால் பக்தா்கள் அவதி
பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயில் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் பக்தா்கள் அவதிப்படுகின்றனா்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி திருஆவினன்குடி கோயிலுக்கு பக்தா்கள் செல்ல முடியாதவாறு அண்மைக்காலமாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. பழனி பேருந்து நிலையம் முதல் திருஆவினன்குடி கோயில் வரையிலான சாலையோரம் பக்தா்கள் செல்ல அமைக்கப்பட்ட நடைமேடை முழுவதும் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இதனால் விழாக் காலங்களிலும், விடுமுறை நாள்களிலும் இந்தச் சாலையில் இரு சக்கர வாகனம் கூட செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.