சட்ட விரோத ஆயுதங்களை 7 நாள்களில் ஒப்படைக்கவும்: மணிப்பூர் ஆளுநர் உத்தரவு!
``தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கவே மும்மொழிக் கொள்கையை திணிக்கிறது..!” -காதர் மொய்தீன்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அணி மற்றும் முஸ்லிம் மாணவர் பேரவை இணைந்து சமூக நல்லிணக்க மிலாது விழா மற்றும் மாநில அளவிலான பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழாவை திருச்சியில் நடத்தியது. இவ்விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், எம்.பி நவாஸ் கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன்,
“உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை கடந்த ஜனவரி 27-ஆம் தேதி அம் மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. அது, நாற்பது சதவீதம் உள்ள மலை பழங்குடியினருக்கு இந்த பொது சிவில் சட்டம் பொருந்தாது எனவும் மற்ற அனைவருக்கும் இந்த பொது சிவில் சட்டம் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது.

இதிலிருந்து அந்த பொது சிவில் சட்டம் என்பது பொது மதச் சட்டம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. எனவே, இது இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு சட்டமாக கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தொடர உள்ளோம். அதேபோல், இந்திய பாராளுமன்றத்தில் லோக்சபாவில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு தொடர்ந்து முயற்சி செய்யப்பட்டு வருகிறது. மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வக்ஃபு திருத்தச் சட்டம் கருத்து கேட்புகளை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கருத்துகள் பெறப்பட்ட நிலையில் அதில் 95 % மக்கள் அதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். இது, இஸ்லாமியர்களின் சொத்துகளை அரசுடமையாக்குவதற்கான ஒரு முயற்சி தான்.
ராணுவம், ரயில்வே போன்ற பொது நிறுவனங்களின் சொத்துகள் அனைத்தும் அரசுடையது என்பது போல இஸ்லாமியர்களின் குறிப்பாக வக்ஃபுக்கு சொந்தமான சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த வகுப்பு திருத்த சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது. இதை எதிர்த்தும் நாங்கள் கட்டாயம் நீதிமன்றத்திற்கும், மக்கள் மன்றத்திற்கும் செல்வோம். வக்ஃபு திருத்தச் சட்டம் என்கிற பெயரில் அந்த சட்டம் கொண்டு வரப்பட்டாலும் அது வக்ஃபையே ஒழிக்கும் சட்டமாகவே உள்ளது. அதை மத்திய அரசு நிறைவேற்ற கூடாது.

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை முதலமைச்சர் சிறப்பாக நடத்தி வருகிறார். தமிழகத்தின் முன்னேற்றத்தை, வளர்ச்சியை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு இடையூறுகளை தமிழகத்திற்கு கொடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் பள்ளி கல்வித்துறைக்கு தேவையான நிதியை ஒதுக்குவோம் என கூறுவதும். இருமொழிக் கொள்கை என்பது தமிழகத்தில் வேரூன்றிய தத்துவம். அதை கெடுப்பதற்கான முயற்சியை ஒன்றிய அரசு செய்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் தமிழ் மக்களுக்கு எதிரான முயற்சிகள் தான். இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் தமிழகம் முன்மாதிரியாக இருக்கிறது என்பதை பொறுக்க முடியாமல் செய்யும் முயற்சிதான். இது போன்ற முயற்சிகளில் ஈடுபடாமல் ஆக்கபூர்வமான காரியங்களை மத்திய அரசு செய்ய வேண்டும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருப்பரங்குன்றத்தை சுற்றி வசிக்கக்கூடிய ஆறு சமுதாயங்களை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து தங்களுக்குள் எந்தவித பிரிவினையும் பாகுபாடும், பிரச்னைகளும் இல்லாமல் இன்று வரை நாங்கள் அண்ணன் தம்பி உறவு முறையோடு வாழ்ந்து வருகிறோம் என்று தங்களுடைய கைப்பட எழுதிக் கொடுத்த அந்த கடிதத்தை இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆவணமாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பல மத சக்திகள் அமைதியை குழைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த செயல்பாடுகள் மூலம் தங்களுடைய கட்சியை வளர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். இதை தமிழக அரசும் ஏற்காது. தமிழக மக்களும் ஏற்க மாட்டார்கள். இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கலைஞர் ஏற்கெனவே 3.5 சதவீத இட ஒதுக்கீடை வழங்கி உள்ள நிலையில் அதை 5% ஆக உயர்த்தி கொடுத்தால் எங்களுக்கு மகிழ்ச்சி தான். இந்தியாவில் மற்ற மாநிலங்கள் இந்தியை ஏற்றுக் கொள்வதை போல தமிழகமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக்க காரணம் அவர்கள் இந்தியை வளர்க்க விரும்பவில்லை. சமஸ்கிருதத்தை வளர்க்க விரும்புகிறார்கள். மத்திய அரசு முதல்கட்டமாக மூன்று கிரிமினல் சட்டங்களை சமஸ்கிருதத்தில் கொண்டு வந்து அதை ஆங்கிலத்தில் வடிவமைத்துள்ளது. எனவே, சமஸ்கிருதத்தை வளர்க்கவே ஒன்றிய அரசு முயற்சிக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs