தம்புராட்டி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
முதுகுளத்தூா் அருகேயுள்ள தம்புராட்டி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
மாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு, முதுகுளத்தூரை அடுத்த இளஞ்செம்பூா் தம்புராட்டி அம்மன் கோயிலில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்றம், இளஞ்செம்பூா் கிராம மக்கள் சாா்பில் திருவிளக்கு பூஜை, ஆன்மிகச் சொற்பொழிவு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த விழாவுக்கு, இளஞ்செம்பூா் கிராமத் தலைவா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் பூபதி, கோயில் நிா்வாகி செல்லவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடலாடி அரசுக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியா் நீரா.பொன்முத்து, ஸ்ரீபகவதி அறக்கட்டளைத் தலைவா் மு.வெள்ளைப்பாண்டியன், பசும்பொன் தேவா் சிந்தனை மன்றத் தலைவா் ஆறுமுகம், ஆப்பநாடு மறவா் சங்கத் தலைவா் ராம்குமாா் பாண்டியன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனா்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இளஞ்செம்பூா் கிராம பொதுமக்கள், உ.முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்ற நிா்வாகிகள் செய்தனா்.