ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
தம்மம்பட்டி,கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை
தம்மம்பட்டி,கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தம்மம்பட்டி, கெங்கவல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் பாதிப்பு சுட்டெறித்து வந்த நிலையில் பொதுமக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சமடைந்து வந்தனா். இந்த நிலையில் கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கூடமலை, கொண்டையம்பள்ளி, நாகியம்பட்டி, உலிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரை மிதமான மழை பெய்தது .இதனால் அங்கு வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனா்.