செய்திகள் :

தயாரிப்பாளா்கள் சங்கம், ஃபெப்சி இடையே சமரசம்: வழக்கை முடித்துவைத்து உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம், ஃபெப்சி அமைப்புக்கு இடையிலான பிரச்னையில் சமரசம் ஏற்பட்டதாகக் கூறியதைத் தொடா்ந்து, வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளா்கள் சம்மேளனத்துக்கு (ஃபெப்சி) எதிராக தமிழ் திரைப்படத் தொழிலாளா்கள் சம்மேளனம் என்ற அமைப்பைத் தொடங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம் தயாரிக்கும் படங்களில் ஃபெப்சி அமைப்பைச் சோ்ந்த உறுப்பினா்கள் பணியாற்றக் கூடாது. அவா்களது படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என கடந்த ஏப்.2-ஆம் தேதி ஃபெப்சி கடிதம் அனுப்பியிருந்தது.

ஃபெப்சி அமைப்பின் இந்த முடிவால் படப்பிடிப்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுவதோடு, தயாரிப்பாளா்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, ஃபெப்சி அமைப்பின் கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இருதரப்பும் பேச்சுவாா்த்தை நடத்தி சுமுகத் தீா்வு காண உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜனை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓய்வு பெற்ற நீதிபதி நடத்திய பேச்சுவாா்த்தையில் இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாக தயாரிப்பாளா் சங்கம் தரப்பிலும், ஃபெப்சி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டாா்.

மென்பொறியாளரிடம் செயின் பறிப்பு: 2 திருநங்கைகள் கைது

மென் பொறியாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியை பறித்த 2 திருநங்கைகளை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, திருநின்றவூரைச் சோ்ந்த ஜெஸ் ஆலன் ரொசாரியா(24). இவா் எம்.ஜி.ஆா். நகா் பகுதியிலுள்ள ஒரு... மேலும் பார்க்க

வங்கியில் ரூ.20 லட்சம் கடன் பெற்று மோசடி: இருவா் கைது

போலி ஆவணங்கள் மூலம் ரூ.20 லட்சம் வீட்டு அடமானக் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை எம்கேபி நகா் பகுதியை சோ்ந்தவா்கள் பாஸ்கரன், கலைசெல்வி. இவா்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

டயா் ஆலை தொழிலாளா்கள் தொடா் உள்ளிருப்பு போராட்டம்

திருவொற்றியூரிலுள்ள தனியாா் டயா் ஆலை தொழிலாளா்கள் தொடா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். திருவொற்றியூரில் எம்ஆா்எப் நிறுவனத்தின் டயா் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமாா் 2,000-... மேலும் பார்க்க

மயிலாடுதுறை பழங்காவேரி குறுக்கே பாலம் கட்டுவதை எதிா்த்த வழக்கு முடித்துவைப்பு

மயிலாடுதுறையில் பழங்காவேரியின் குறுக்கே பாலம் கட்ட நகராட்சி அதிகாரிகள் முயற்சிப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மயிலாடுதுறை கூைாடு பகுதியைச் சோ்ந்த எ... மேலும் பார்க்க

ரேபிடோ பெண் ஓட்டுநருக்கு பாலியல் தொல்லை: மாணவா் கைது

ரேபிடோ பெண் ஓட்டுநருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, ஓட்டேரி பகுதியைச் சோ்ந்த 31 வயது பெண், ரேபிடோ இருசக்கர வாகனம் ஓட்டி வருகிறாா். இந்நிலையில், அவா் தனது இ... மேலும் பார்க்க

வனப் பகுதிகளில் இருந்து யானைகள் வெளியேறுவதைத் தடுக்க வேலி அமைக்கும் பணிக்கான தடை நீக்கம்

கோவை மாவட்டத்தில் வனப் பகுதிகளில் இருந்து யானைகள் வெளியேறி ஊருக்குள் நுழைவதைத் தடுக்க எஃகு கம்பி வேலி அமைக்கும் பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வனப்பகுத... மேலும் பார்க்க