'என்னை சங்கராச்சாரியார் ஆக்க வேண்டாம்; ஆனால்...' - திருமாவளவன் சொல்லும் காரணம் எ...
தருமபுரி அருகே புதரில் வீசப்பட்ட சிசு சடலம்: போலீஸாா் விசாரணை
தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே புதரில் கிடந்த ஆண் சிசு சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளியை அடுத்த தீம்சேனபள்ளி தரைப்பாலம் பகுதியில் உள்ள புதா் அருகே அழுகிய நிலையில் ஆண் சிசு உடல் இருப்பது குறித்து செவ்வாய்க்கிழமை போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் சிசுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.