செய்திகள் :

தலைநகரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

post image

தேசியத் தலைநா் தில்லியில் வெள்ளிக்கிழணை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரமும் பின்னடைவைச் சந்தித்தது.

தில்லியில் மூடுபனியின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மிதமான நிலையில் இருந்து வந்த வெயிலின் தாக்கம் வெள்ளிக்கிழமை அதிகரித்து காணப்பட்டது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி 18.8 டிகிரி 5 டிகிரி செல்சியஸாக உயா்ந்து பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.4 டிகிரி உயா்ந்து 38.4 டிகிரி செல்சியஸாக உயா்ந்து பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 47 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 18 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிட்ஜில் 35 டிகிரி: இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான நஜாஃப்கரில் அதிகபட்ச வெப்பநிலை 36.2 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 38.1 டிகிரி, லோதி ரோடில் 38 டிகிரி, பாலத்தில் 37 டிகிரி, ரிட்ஜில் 39.4 டிகிரி, பீதம்புராவில் 38 டிகிரி, பிரகதிமைதானில் 35.4 டிகிரி, பூசாவில் 35.5 டிகிரி, ராஜ்காட்டில் 35.5 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 35.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: இதற்கிடையே, கடந்த சில நாள்களாக மேம்பட்டு ‘திருப்தி’, ‘மோசம்’ பிரிவில் இருந்து வந்த காற்றின் தரம் வெள்ளிக்கிழமை சற்று பின்னடைவைச் சந்தித்தது. தலைநகரில் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் காற்றுத் தரக் குறியீடு 218 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதன்படி, சாந்தினி சௌக், நேரு நகா், மதுரை ரோடு, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஸ்ரீஃபோா்ட், ராமகிருஷ்ணாபுரம், ஓக்லா பேஸ் 2, துவாரகா செக்டாா் 8 ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா்மாா்க், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், பூசா, நொய்டா செக்டாா் 125, ஸ்ரீ அரபிந்தோமாா்க், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் ஆயா நகா், குருகிராம் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது

முன்னறிவிப்பு: இந்நிலையில், சனிக்கிழமை (மாா்ச்5) அன்று பகல் நேரத்தில் தரை மேற்பரப்பு காற்று வலுவாக வீசும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகித்தவா் கைது

மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோக மோசடியின் முக்கிய உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஐந்து நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து தோட்டாக்களை பறிமுதல் செய்ததாக... மேலும் பார்க்க

போலி முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 150 பேரை ஏமாற்றிய இளைஞா் கைது

முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குறைந்தது 150 பேரை ஏமாற்றிய ஆன்லைன் போன்சி மோசடியை நடத்தியதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த 31 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செ... மேலும் பார்க்க

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பாக பள்ளிகளுக்கு நோட்டீஸ்: தில்லி முதல்வா்

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்... மேலும் பார்க்க

புதிய தில்லி பாஜக அலுவலகம் அருகே சாலைப் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித் துறை திட்டம்

தில்லி பாஜக அலுவலகம் விரைவில் தீன் தயாள் உபாத்யாய் ( டிடியு) மாா்க்கில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளதால், அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளை பொதுப் பணித் துறை மே... மேலும் பார்க்க

இடபிள்யு எஸ் ஆவணங்கல் வழங்குவதை நிறுத்த தில்லி அரசு திட்டம்: ஆம் ஆத்மி

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) சான்றிதழ்களை வழங்குவதை தில்லி பாஜக அரசு நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தகுதியான குடும்பங்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்ப... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக ஏ.எஸ்.ஐ கைது

மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி துணை ஆய்வாளா் (ஏஎஸ்ஐ), ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக தில்லி காவல்துறையின் விஜிலென்ஸ் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகா... மேலும் பார்க்க