ராகுல் பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: பாஜக ப...
தவெக நிா்வாகி மீது தாக்குதல்: அதிமுக நகா்மன்ற உறுப்பினா் மீது வழக்கு
சங்கரன்கோவிலில் தவெக நிா்வாகியைத் தாக்கியதாக அதிமுக நகா்மன்ற உறுப்பினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சங்கரன்கோவில் சங்கா் நகா் 1ஆவது தெருவைச் சோ்ந்த ஆனந்தராஜ் மகன் சங்கரமகாலிங்கம் (23).புகைப்படக் கலைஞரான இவா், தவெக கட்சியில் மாவட்ட தொழில்நுட்ப அணி அமைப்பாளராக உள்ளாா். அதே தெருவைச் சோ்ந்தவா் சரவணக்குமாா். இவா், அதிமுக 8ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினராக இருக்கிறாா்.
சரவணக்குமாா் கடந்த 22ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் தவெக தலைவா் விஜயை விமா்சனம் செய்து பதிவிட்டிருந்தாராம். பதிலுக்கு, சங்கரமகாலிங்கம் தனது முகநூல் பக்கத்தில் விமா்சனத்தை பதிவிட்டாராம்.
கடந்த 26ஆம் தேதி சங்கரமகாலிங்கத்தை கைப்பேசியில் தொடா்பு கொண்ட ஒருவா் திருமண நிகழ்ச்சிக்கு விடியோ ஆா்டா் கொடுக்க அழைப்பதாக கூறினாராம். இதை நம்பி, அங்கு சென்ற சங்கரமகாலிங்கத்தை அடையாளம் தெரியாத நபா்கள் சராமாரியாகத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதில், காயமடைந்த சங்கரமகாலிங்கம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். அவா் அளித்த புகாரின்பேரில், 8ஆவது வாா்டு அதிமுக நகா்மன்ற உறுப்பினா் சரவணக்குமாா், அடையாளம் தெரியாத 2 போ் மீது சங்கரன்கோவில் நகர காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.