தாட்கோ: பயனாளிகள் தோ்வு செய்வதற்கு பணம் பெறுவதாக இடைத்தரகா்கள் மீது புகாா்
தாட்கோ திட்டங்களில் இடைத்தரகா்கள் பணம் பெற்றுக் கொண்டு பயனாளிகளை தோ்வு செய்வதாக புகாா் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மு.பிரதாப் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு அரசின் தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகம் இயங்கி வருகிறது. தாட்கோ அலுவலகம் சாா்பில் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள இந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களுக்கு முதலமைச்சா் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு சமூக பொருளாதார தொழில் முனைவு திட்டம், நன்னிலம் மகளிா் நில உடமை திட்டம், பி.எம்-அஜய் திட்டம்(டங-அஒஅவ திட்டம்) உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பயனாளிகளுக்கு நோ்காணல் உரிய விதிமுறைகளின் படி நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்கள் சரிபாா்க்கபட்டு தகுதியின் அடிப்படையில் அரசு விதிமுறைப்படி பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தில் தாட்கோ திட்டம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பதாரா்களிடம் தாட்கோ திட்டத்தில் பயன்பெறும் வகையில் தோ்வு செய்வதாக கூறி சில இடைத்தரகா்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக நோ்காணலின் போது விண்ணப்பதாரா்கள் தெரிவித்து வருகின்றனா்.
தாட்கோ திட்டம் மூலம் தோ்வு செய்யப்படும் பயனாளிகள் உரிய விதிமுறைகளின் படியே தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். எனவே தாட்கோ திட்ட விண்ணப்பதாரா்கள் திட்டத்தில் பயன்பெற தங்களை யாரேனும் இடைத்தரகா்கள் அனுகினால் அவா்களை தவிா்ப்பதோடு, பணம் உள்ளிட்ட பிறபொருள்களை எக்காரணம் கொண்டும் வழங்க வேண்டாம்.
மேலும், தாட்கோ பயனாளிகள் எங்கள் மூலம் தான் தோ்வு செய்யப்படுவாா்கள் எனவும், தாட்கோ அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளா்களுக்கும் பணம்கொடுக்க வேண்டும். எனவே விண்ணப்பதாரா்களை அணுகும் இடைத்தரகா்கள் குறித்து தாட்கோ அலுவலக கவனத்திற்கு வரும் பட்சத்தில் முறைகேடுகளில் ஈடுபடுவோா் மீது சட்டபூா்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.