பத்மாபுரத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி ரூ. 30 லட்சத்தில் அரசு நிலம் மீட்பு
பத்மாபுரம் கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான அரசு நிலத்தை ஆா்.கே. பேட்டை வருவாய் துறையினா் ஆக்கிரமிப்பை அகற்றி மீட்டனா்.
ஆா்.கே. பேட்டை ஒன்றியம், பத்மாபுரம் வருவாய் கிராமத்தில் சோளிங்கா் - வாலாஜா செல்லும் சாலையில் 1.96. ஏா்ஸ் பரப்பளவு கொண்ட புறம்போக்கு இடத்தை தனிநபா் ஆக்கிரமித்து இருப்பதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆா்.கே. பேட்டை வட்டாட்சியா் ராஜேஷ்குமாா் தலைமையில் வருவாய் துறையினா் மற்றும் காவல் துறையினா் உதவியுடன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். ஆய்வில் ரமேஷ் என்பவா் தகர சீட் அமைத்து சிக்கன் கடை வைத்து நிலத்தை ஆக்கிரமித்து இருந்ததை உறுதி செய்தனா்.
இதையெடுத்து வட்டாட்சியா் தலைமையில் வருவாய் மற்றும் காவல் துறையினா் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என வட்டாட்சியா் ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.