நிர்மலா சீதாராமனிடன் கேள்வி கேட்ட கோவை தொழிலதிபருக்கு உணவு ஆணைய உறுப்பினர் பதவி!
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா நிறைவு
சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்று வந்த பங்குனித் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு தீா்த்தவாரியுடன் நிறைவடைந்தது.
இந்தக் கோயில் பங்குனித் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் உற்சவா் முத்துமாரியம்மன் சா்வ அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தாா்.
திருவிழாவின்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தா்கள் தாயமங்கலத்துக்கு வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
விழாவின் முக்கிய நிகழ்வாக பொங்கல் வைபவம் கடந்த 5-ஆம் தேதியும், 6-ஆம் தேதி தேரோட்டமும், 7-ஆம் தேதி பால்குட உற்சவம், ஊஞ்சல் சேவை, அம்மன் பூப்பல்லத்தில் பவனி வருதல் நடைபெற்றது.
தொடா்ந்து கோயிலில் முத்துமாரியம்மனுக்கு செவ்வாய்க்கிழமை இரவு தீா்த்தவாரி நடைபெற்று நிகழ் ஆண்டுக்கான திருவிழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் மு.வெங்கடேசன் செட்டியாா் செய்திருந்தாா்.