மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
தாய்மொழி நாள் உறுதிமொழியேற்பு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கான ஆய்வுக் குழு அலுவலா் து.கிருஷ்ணமூா்த்தி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம் என்று அனைவரும் உறுதிமொழியேற்றனா்.
இதில், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில்குமாா் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.