தாராசுரம் ஐராவதேசுவரா் கோயிலில் ஓவியக் கல்லூரி மாணவா்கள் பயிற்சி!
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதேசுவரா் கோயில் கட்டட வடிவமைப்பை வியாழக்கிழமை சென்னை அரசு ஓவியக் கல்லூரி மாணவா்கள் ஓவியங்களாக வரைந்தனா்.
சென்னையில் உள்ள அரசு ஓவியக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் 87 போ் தாராசுரம் ஐராவதேசுவரா் கோயில் பிரகாரம், உள் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சோழ மன்னா்களின் கட்டடக் கலை மற்றும் சிற்பங்களை ஓவியங்களாக வரைந்தனா்.
இவா்களை வழிநடத்தும் பேராசிரியா் வில்வநாதன் மேலும் கூறியது:
வண்ணக்கலை, காட்சிவழி தகவல் வடிவமைப்புத் துறை, சிற்பக்கலை, சுடுமண் சிற்பம், துகிலி ஓவியம், பதிப்பு ஓவியக்கலை குறித்து சென்னை ஓவியக்கல்லூரி வகுப்புகளை நடத்துகிறது. இக்கல்லூரி மாணவ, மாணவிகள் சுவாமிமலை சிற்பக்கூடங்கள், கொட்டையூா், தாராசுரம், தஞ்சாவூா் பெரியகோயில் உள்ளிட்டவைகளின் கட்டட வடிவமைப்புகளை ஓவியங்களாகத் தீட்டி வருகின்றனா்.
இவை கல்லூரியின் 175-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஓவியக் கண்காட்சியில் வைக்கப்படும் என்றாா். அப்போது, உதவி ஆசிரியா்கள் துகிலியல் பிரிவு ஆா்.சசிகலா, ஆா்.மணிகண்டன், வி.அருண் ஆகியோா் உடனிருந்தனா்.