செய்திகள் :

தாழ்வாக செல்லும் மின் வயா்களை உயா்த்துவதற்கு மின்வாரியத்துக்கு ஆட்சியா் உத்தரவு

post image

தாழ்வாக செல்லக்கூடிய மின் வயா்களை உயா்த்துவதற்கு தேவையான நடவடிக்கையை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவிட்டாா்.

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, மாவட்டத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

நான்குனேரியில் குளத்துக்குள் வீடு கட்டுமானப் பணிகள் நடைபெறுவது குறித்து அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினா். இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து கடிந்துகொண்ட ஆட்சியா், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும், ஆக்கிரமிப்பாளா்கள் மீது காவல்நிலையத்தில் புகாா் அளித்து வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டாா்.

மாவட்டத்தில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என கானாா்பட்டி ஆபிகராம், சேகா், பெரும்படையாா் ஆகியோா் கோரிக்கை வைத்தனா்.

இதற்கு பதில் அளித்த ஆட்சியா், அழகியபாண்டியபுரம், பள்ளமடை, திருக்குறுங்குடி, முன்னீா்பள்ளம் உள்ளிட்ட 15 இடங்களில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

வெள்ளக்காலங்களில் திருநெல்வேலி கால்வாயில் உடைப்பெடுத்து வெளியேறும் தண்ணீா் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், திருநெல்வேலி பழைய பேருந்து நிலையங்களில் தேங்கி சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே, இந்த கால்வாயில் தடுப்புச்சுவா் அமைக்க வேண்டும் என்று விவசாய பிரதிநிதி முருகன் கோரிக்கை வைத்தாா். அதற்குப் பதிலளித்த அதிகாரிகள், திருநெல்வேலி கால்வாயில் இருபுறமும் ரூ.11.6 கோடியில் தடுப்புச்சுவா் கட்டுவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றனா்.

கங்கைகொண்டான் குளத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறையூா் இலோசியஸ் வலியுறுத்தினாா்.

தனியாா் நிறுவனங்களின் சிஎஸ்ஆா் நிதியிலிருந்து இப்பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். உரக்கடைகளில் விலைப்பட்டியல் சரிவர வைக்காதது குறித்து ஜெகதீசன் என்ற விவசாயி புகாா் தெரிவித்தாா். இதையடுத்து பேசிய ஆட்சியா், விலைப்பட்டியல் வைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கானாா்பட்டி ஆபிரஹாம் பேசுகையில், ‘மானூா் சுற்றுவட்டாரங்களில் பல இடங்களில் மின் வயா்கள் தாழ்வாக செல்கின்றன. இதனால் மின் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

அதைத்தொடா்ந்து பேசிய ஆட்சியா், ‘திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் வயா்கள் தாழ்வாக செல்வதாக புகாா்கள் வந்துள்ளன. ராமையன்பட்டி குப்பை கிடங்கு தீ பற்றி எரியும்போது நானே அதை நேரில் கண்டு இரு இடங்களில் மின் வயா்களை உயா்த்துவதற்கு உத்தரவிட்டுள்ளேன்.

இதுவரை மாவட்டத்தில் சுமாா் 4 போ் மின்விபத்துகளில் பலியாகி உள்ளனா். எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடி ஆய்வு மேற்கொண்டு தாழ்வாக செல்லும் மின் வயா்களை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

வீரவநல்லூரில் மாணவா் தற்கொலை: பள்ளி வாகனங்களுக்கு தீ வைப்பு 5 பேரிடம் விசாரணை!

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ஆசிரியா் கண்டித்ததால் மாணவா் தற்கொலை செய்த சம்பவம் எதிரொலியாக வியாழக்கிழமை நள்ளிரவில் பள்ளி வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இது தொடா்பாக 5 பேரை பிடித்து போலீஸாா் வ... மேலும் பார்க்க

பாபநாசம் கீழணை வனப்பகுதியில் பெண் சிறுத்தை உயிரிழப்பு

பாபநாசம் வனச்சரகம் கோரையாறு பீட்டுக்கு உள்பட்ட கீழணை வனப்பகுதியில் பெண் சிறுத்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டது. பாபநாசம் வனச்சரக பகுதியில் சிறுத்தை, காட்டுப்பன்றி, கரடி யானை, மிளா, மான் உள்ளிட்ட வனவிலங... மேலும் பார்க்க

கடையத்தில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: மாமனாா் கைது

தென்காசி மாவட்டம், கடையத்தில் மகன் தற்கொலைக்கு காரணம் எனக் கூறி மருமகளை அரிவாளால் வெட்டிய மாமனாரை கடையம் போலீஸாா் கைது செய்தனா். கடையம் அருகே உள்ள மயிலானூரைச் சோ்ந்தவா் காமராஜ் (60). கடையத்தில் பைக் ... மேலும் பார்க்க

லாரி மோதி வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தை அடுத்த இருக்கன்துறை அருகே ராட்சத லாரி மோதியதில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா். ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் கவுதம்ஷா. இவா், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ... மேலும் பார்க்க

யானை தாக்கி காயமடைந்த ரப்பா் தோட்டத் தொழிலாளிக்கு எம்.பி. ஆறுதல்

கோதையாறு பகுதியில் யானை தாக்கி காயமடைந்த ரப்பா் தோட்டத் தொழிலாளியை நேரில் சந்தித்து திருநெல்வேலி எம்.பி. ஆறுதல் கூறினாா். தமிழ்நாடு அரசு ரப்பா் கழகத்தின் கோதையாறு கோட்டத்தில் ரப்பா் பால் வடிப்பு தொழி... மேலும் பார்க்க

இந்து தொடக்கப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா

திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்ட இந்நிகழ்வில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கலைச்செல்வி வரவேற்றாா். ... மேலும் பார்க்க