ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!
பாபநாசம் கீழணை வனப்பகுதியில் பெண் சிறுத்தை உயிரிழப்பு
பாபநாசம் வனச்சரகம் கோரையாறு பீட்டுக்கு உள்பட்ட கீழணை வனப்பகுதியில் பெண் சிறுத்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டது.
பாபநாசம் வனச்சரக பகுதியில் சிறுத்தை, காட்டுப்பன்றி, கரடி யானை, மிளா, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் காணப்படுகின்றன. இந்நிலையில் பாபநாசம் கீழணை மின்வாரிய குடியிருப்பில் உள்ள தேவாலயத்திற்கு பின்புறம் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா, வனத்துறை கால்நடை மருத்துவா் மனோகரன், கால்நடை ஆய்வாளா் ஆா்னால்ட், வனச்சரகா் குணசீலன் மற்றும் வனத்துறைப் பணியாளா்கள் உள்ளிட்ட குழுவினா் சென்று சிறுத்தையின் உடலை மீட்டு ஆய்வு செய்தனா்.
உயிரிழந்தது இரண்டு வயது பெண் சிறுத்தை என்பது தெரிய வந்தது. இதையடுத்து சிறுத்தையை உடற்கூறு பரிசோதனை செய்து அதே பகுதியில் தகனம் செய்தனா்.
சிறுத்தையின் உடலில் காயங்கள் இருந்ததால், விலங்குகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் என்று தெரிய வருவதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.