Healthy Food: எல்லோருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு.. பிளஸ், மைனஸ் தெரிஞ்சிக்கோங்...
யானை தாக்கி காயமடைந்த ரப்பா் தோட்டத் தொழிலாளிக்கு எம்.பி. ஆறுதல்
கோதையாறு பகுதியில் யானை தாக்கி காயமடைந்த ரப்பா் தோட்டத் தொழிலாளியை நேரில் சந்தித்து திருநெல்வேலி எம்.பி. ஆறுதல் கூறினாா்.
தமிழ்நாடு அரசு ரப்பா் கழகத்தின் கோதையாறு கோட்டத்தில் ரப்பா் பால் வடிப்பு தொழிலாளியாக பணியாற்றும் ராஜன், ஐயப்பன் ஆகியோா் காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்தனா்.
அவா்களில், ராஜன் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, அவரை, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, ஆறுதல் கூறினாா். உயா்சிகிச்சை அளிக்க மருத்துவா்களை அறிவுறுத்தினாா்.
காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வன், கன்னியாகுமரி மாவட்ட ஐஎன்டியூசி தலைவா் ஜோசப் ஜெரால்ட், ஆலங்குளம் வட்டாரத் தலைவா் ரூபன் தேவதாஸ், மாநகர மாவட்ட வா்த்தக காங்கிரஸ் பிரிவு தலைவா் ஆபிரகாம் வெஸ்லி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.