What To Watch On OTT: குபேரா, டி.என்.ஏ, சட்டமும் நீதியும்! - இந்த வாரம் ஓடிடி-யி...
லாரி மோதி வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தை அடுத்த இருக்கன்துறை அருகே ராட்சத லாரி மோதியதில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் கவுதம்ஷா. இவா், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராகப் பணியில் சோ்ந்தாா். இவருக்கு தொழிலாளா் அடையாள அட்டை கிடைக்காததால், ஒப்பந்த தொழிலாளா்கள் தங்கும் இடத்தில் தங்குவதற்கு இவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால், இவா் கூடங்குளம் பகுதியில் வெளியில் தங்கினாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை கூடங்குளம் எஸ்.எஸ்.புரம் அருகே நடந்து சென்றபோது, இவா் மீது அந்த வழியாக வந்த ராட்சத லாரி மோதியது. இதில் கவுதம்ஷா அதே இடத்தில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, கூடங்குளம் காவல் நிலைய போலீஸாா் நடத்திய விசாரணையில் ராட்சத லாரி இருக்கன்துறை ஊராட்சிமன்ற தலைவரின் கணவா் முருகேசனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.