திமுக ஆட்சியின் ரிப்போர்ட் கார்டு: எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்!!
திமுக ஆட்சியின் ரிப்போர்ட் கார்டு ஒன்றை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். உருட்டுகளும் திருட்டுகளும் என்ற பெயரில் புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில், திமுக ஆட்சியை விமர்சிக்கும் வில்லுப்பாட்டு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், நான்கரை ஆண்டுகள் முடித்த திமுக ஆட்சி பற்றிய 'ரிப்போர்ட் கார்டு' என்ற பெயரில், ஒரு அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில் வாக்காளர்கள் போட்ட மதிப்பெண்களையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
தேர்தல் வாக்குறுதிகளாக திமுக சொன்னவற்றை செய்யவில்லை. இதற்கான 'வில்லுப்பாட்டு', 'சொன்னீங்களே செஞ்சீங்களா' என்ற விடியோ காட்சிகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.
திமுக கொடுத்த வாக்குறுதிகளைச் சொல்லி 'துரோக சக்கரம்' என்ற ஏமாற்றிய சக்கர வடிவம் ஒன்றையும் மேடையில் வைத்துக் காட்டினர்.
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இந்நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை விளக்கிப் பேசினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக, நான்கரை ஆண்டுகள் முடித்த திமுக ஆட்சி பற்றிய 'ரிப்போர்ட் கார்டு' வெளியிடப்பட்டது. வாக்காளர்கள் போட்ட மதிப்பெண்களையும் எடப்பாடி பழனிசாமி அதில் வெளியிட்டிருந்தார்.