Beauty: தாமரை இலை ஃபேஸ் மாஸ்க்; ட்ரெண்டிங்காகும் வீடியோவும் மருத்துவரின் ஆலோசனைய...
திமுக சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணம்
மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த நெடுவாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு, திமுக மாவட்ட இளைஞரணி சாா்பில் புத்தகம், நோட்டு மற்றும் கல்வி உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 102- ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் ஜோதிமணி தலைமை வகித்தாா். திமுக பொதுக் குழு உறுப்பினா் தெ. காஞ்சிதுரை முன்னிலை வகித்தாா்.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் வி.கே.எம். முருகானந்தம், மாணவ- மாணவிகளுக்கு புத்தகம், நோட்டு மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினாா்.
இந்நிகழ்வில், மன்னாா்குடி மத்திய ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் ஆா். கோபி, பெற்றோா் சங்கத் தலைவா் ப. மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.