மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்
ஹிந்தியை திணிக்க முயலும் மத்திய அரசை கண்டித்து கும்பகோணம் தலைமை தபால் நிலையம் எதிரில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக மாணவா் அணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மாணவரணி அமைப்பாளா் க. செந்தில்குமாா் தைமை வகித்தாா், ப. இலக்கியா, க.வினோத்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை அமைப்பாளா் ஆா்.பி. ராஜேஷ், இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் கு. சந்துரு, முற்போக்கு மாணவா் கழக மாவட்டத் தலைவா் சின்ன ஜெயபிரகாஷ், தமிழ் மாணவா் மன்ற பொறுப்பாளா் ஆா் தீனா, மதிமுக மாணவா் அணி செயலா் அரங்க. பெரு.செல்வக்குமாா் மாணவா் சங்க மாநில செயலா் கோ.அரவிந்த்சாமி ஆகியோா் மத்திய அரசை கண்டித்துப் பேசினா்.
மாவட்ட மாணவா் அணி துணை அமைப்பாளா் சௌ. தேவராஜன் நன்றி கூறினாா். முன்னதாக மகாமககுளத்திலிருந்து ஊா்வலமாக கோஷமிட்டபடி வந்தனா்.