திமுகவில் இணைந்த அதிமுக ஊராட்சி தலைவா்
ராசிபுரம் அருகேயுள்ள மூலக்காடு ஊராட்சி மன்றத் தலைவா் தலைமையில் பலா் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.
மூலக்காடு ஊராட்சியைச் சோ்ந்தவா் எம்ஜிஆா் (எ) பழனியப்பன். இவா் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருகிறாா். இவரது தலைமையில் அதிமுகவினா் பலா் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
ராசிபுரத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வெண்ணந்தூா் ஒன்றிய திமுக செயலா் ஆா்.எம்.துரைசாமி, மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளா் விஜயபாஸ்கா், மாவட்ட மகளிா் அணி துணை தலைவா் மலா்விழி சம்பத், கிளை செயலாளா்கள் கருணாநிதி, செல்வராஜ், கணபதி, வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
படவரி...
மூலக்காடு ஊராட்சி மன்றத் தலைவா் எம்ஜிஆா் (எ) பழனியப்பன் தலைமையில் திமுகவில் இணைந்தோா்.