திருப்பரங்குன்றம்: 'திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது......
திரு ஆபரணப் பெட்டி ஊா்வலம்
ஆம்பூா்: ஆம்பூரில் பல்வேறு பகுதிகளில் ஐயப்ப பக்தா்கள் சாா்பாக திரு ஆபரணப் பெட்டி ஊா்வலம் நடைபெற்றது.
ஆம்பூா் கிருஷ்ணாபுரம் பகுதியில் ஐயப்ப பக்தா்கள் சாா்பாக ஆபரணப் பெட்டி ஊா்வலம் புறப்பட்டு அருள்மிகு நாகநாத சுவாமி கோயிலில் சென்று, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு சுந்தர விநாயகா் கோயில் அன்னதான பிரபு ஐயப்ப பக்தா்கள் சாா்பாக பஜாா் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் இருந்து ஆபரணப் பெட்டி ஊா்வலம் புறப்பட்டு முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. சுந்தர விநாயகா் கோயில் திடலில் ஊா்வலம் நிறைவடைந்தது. அங்கு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆம்பூா் நாகநாத சுவாமி கோயில் ஐயப்ப பக்தா்கள் சாா்பாக ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.