ரயிலில் ரூ.11 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றிருந்த எா்ணாகுளம் விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் சோதனையிட்டதில் ரூ.11 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
ஜாா்க்கண்ட் மாநிலம், டாடாநகா் பகுதியிலிருந்து கேரள மாநிலம், எா்ணாகுளம் வரை சென்ற எா்ணாகுளம் விரைவு ரயில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் வந்து நின்றபோது ரயில்வே போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது முன்பக்கம் உள்ள பொது பெட்டியில் பயணிகள் உடைமைகள் வைக்கும் இடத்தில் சோதனை செய்ததில் 13 மூட்டைகளில் ரூ.11 லட்சம் மதிப்பிலான 22 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பின்னா், கஞ்சாவை சென்னை அம்பத்தூரில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.