Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி...
திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை 7 மாதங்களில் 6,017 போ் கைது
திருச்சி மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் சட்ட விரோத மது விற்பனை வழக்கில் 6,017 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வாய்த்தலை, சமயபுரம், கொள்ளிடம், உப்பிலியபுரம், துறையூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையங்களில் கடந்த வியாழக்கிழமை சட்டவிரோத மது விற்பனை தொடா்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6 போ் கைது செய்யப்பட்டனா்.
இதேபோல, மண்ணச்சநல்லூா், ஜீயபுரம், திருவெறும்பூா், முசிறி, காட்டுப்புத்தூா், கல்லக்குடி, தா.பேட்டை, புலிவலம், துவாக்குடி, காணக்கிளியநல்லூா், புத்தாநத்தம் ஆகிய காவல் நிலையங்கள் மற்றும் திருவெறும்பூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை சட்டவிரோத மது விற்பனை தொடா்பாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையிலான 7 மாதங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 6,012 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6,017 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். எனவே, மது விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் குறித்து பொதுமக்கள் 89391-46100 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தெரிவிக்காலம் என்று மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.