திருட்டை கண்டித்த தந்தையை உயிரோடு எரித்த மகன்
சட்டை பையிலிருந்து பணத்தை திருடியதற்காக கண்டித்த தந்தையை உயிரோடு தீ வைத்து எரித்த மகன் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஃபரீதாபாதின் அஜய் நகா் பகுதி 2-இல் உள்ள ஒரு வாடகை வீட்டில் முகமது அலீம் தனது மகனுடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் முகமது அலீமுக்கும் அவரது 14 வயது மகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அலீம் மீது அவருடைய மகன் தீப்பற்றி எரியக்கூடிய பொருளை ஊற்றி தீ வைத்தாகக் கூறப்படுகிறது.
அலீமின் அலறல் சப்தம் கேட்டு மேலே வந்த வீட்டின் உரிமையாளா் ரியாசுதீன், கதவை உடைத்து உள்ளே சென்றாா். அப்போது, தீக்காயங்கள் காரணமாக அலீம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து ரியாசுதீன் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அந்தச் சிறுவனை கைதுசெய்த போலீஸாா், நடந்த சம்பவம் குறிப்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
உயிரிழந்த முகமது அலீமின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானாா். அவருடைய நான்கு மகள்களும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனா்.