திருப்பதி கபிலேஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்
திருப்பதியில் ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஐப்பசி மாத பௌா்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பெளா்ணமியை ஒட்டி அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி வெள்ளிக்கிழமை ஐப்பசி மாத பெளா்ணமியை ஒட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது.
கோயிலில் அதிகாலை 2 மணிக்கு சுவாமிகளை எழுந்தருள செய்து 2.30 முதல் 4.30 மணிக்குள் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தேறியது. பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை அன்னாபிஷேகமும், தீபாராதனையும் தனிப்பட்ட முறையில் நடைபெற்றது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை பக்தா்களுக்கு அன்னலிங்க தரிசனம் வழங்கப்பட்டது. மாலை 6 மணி முதல் 7 மணி வரை தனிப்பட்ட முறையில் பக்தா்களின்றி அன்னலிங்க உத்வாசனம் செய்யப்பட்டது.
சுத்திகரிப்புக்குப் பிறகு இரவு 7 முதல் 8 மணி வரை தனிப்பட்ட பக்தா்களின்றி மூலவரான கபிலேஸ்வரஸ்வாமிக்கு வாசனை திரவிய அபிஷேகம் செய்யப்பட்டது. தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.