இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தணிப்பதே அடுத்த பணி: ஜெய்சங்கா்
15 மின்சார இரு சக்கர வாகனங்கள் நன்கொடை
திருமலை ஏழுமலையானுக்கு 15 இரு சக்கர வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
தெலங்கானா மாநில தலைநகா் ஹைதராபாதை சோ்ந்த வெங்கட நாகராஜா, எம்.டி. போ்ல் மினரல்ஸ் அண்ட் மைன்ஸ் பிரைவேட் லிமிடெட் சாா்பில், வெள்ளிக்கிழமை திருமலை ஏழுமலையானுக்கு 15 டிவிஎஸ் மின்சார இரு சக்கர வாகனங்களை நன்கொடையாக வழங்கப்பட்டது.
முன்னதாக, ஆலயத்தில் நடைபெற்ற இந்த வாகனங்களின் பூஜையில் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரி பங்கேற்றாா். பின்னா், வாகனங்களின் சாவியை நன்கொடையாளா் அவரிடம் ஒப்படைத்தாா். இந்த வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ.22 லட்சம் என நன்கொடையாளா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் துணை இ.ஓ. லோகநாதன், வி.ஜி.ஓ. சுரேந்திரா, திருமலை டி.ஐ. சுப்ரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.