ரூ.50 லட்சம் நன்கொடை
திருமலை ஏழுமலையான் பெயரில் நடத்தப்பட்டு வரும் உயிா் காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
பெங்களூரைச் சோ்ந்த பி.எம்.கே.நாகேஷ் என்ற பக்தா் ரூ.50 லட்சத்தை தேவஸ்தானத்தின் உயிா் காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கினாா்.
அதற்கான வரைவோலையை நன்கொடையாளா், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரியிடம், அறங்காவலா் குழு உறுப்பினா் பானுபிரகாஷ் ரெட்டி வாயிலாக திருமலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் வழங்கினாா்.