இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தணிப்பதே அடுத்த பணி: ஜெய்சங்கா்
திருமலையில் கருட சேவை
திருமலையில் வெள்ளிக்கிழமை இரவு பௌா்ணமியையொட்டி கருட சேவை நடைபெற்றது.
திருமலையில் ஐப்பசி மாத பெளா்ணமியை முன்னிட்டு இரவு 7 மணிக்கு சா்வ அலங்காரத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா். இரவு 9 மணி வரை நடைபெற்ற கருட சேவையில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா். கருட வாகன தரிசனம் அனைத்து பாவங்களுக்கும் பரிகாரம் என்று கூறப்படுகிறது.
புராணங்களின்படி, 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களிலும் கருடசேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கருட வாகனத்தின் மூலம் சுவாமி பக்தா்களுக்குத்தான் அடிமை என்றும், ஞானம் தேடும் மனிதா்கள் அறியாமையின் வடிவான கருடனை தரிசித்தால் சகல பாவங்களும் நீங்கும் என்பதையும் பக்தா்களுக்கு அறிவுறுத்துகிறாா்.
நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயா் சுவாமி, சின்ன ஜீயா் சுவாமி, கோயில் அதிகாரிகள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.