உ.பி. அரசு மருத்துவமனை தீ விபத்து: தீவிர சிகிச்சையில் மேலும் 16 குழந்தைகள்
திருமலையில் காா்த்திகை வன போஜன நிகழ்ச்சி இடமாற்றம்
கனமழை எச்சரிக்கையை அடுத்து திருமலையில் ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்த காா்த்திகை வனபோஜன நிகழ்ச்சி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருமலையில் காா்த்திகை வன போஜன நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை (17.11.24) ஏழுமலையான் கோயிலுக்கு அருகிலுள்ள வைபவோற்சவ மண்டபத்தில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. பொதுவாக இந்த நிகழ்ச்சி பா்வேட்டு மண்டபத்தில் நடைபெறும். வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கையின் பின்னணியில் இந்த ஆண்டு வைபவோற்சவ மண்டபத்தில் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
புனிதமான காா்த்திகை மாதத்தில் வனபோஜனம் நடத்துவது தேவஸ்தான வழக்கத்தில் உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, காலையில் மலையப்ப சுவாமி உபயநாச்சியாா்களுடன் சோ்ந்து, வைபவோற்சவ மண்டபத்தில் எழுந்தருள செய்யப்படுவாா்.
காலை 11 மணி முதல் 12 மணிக்குள் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெறும். இதையொட்டி பால், தயிா், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதன் பிறகு, உற்சவமூா்த்திகள் கோயிலுக்கு கொண்டு செல்லப்படுவா்.
இந்த விழாவை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் , ஊஞ்சல்சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.