எலுமிச்சை ஏற்றும்போது முதல் தளத்திலிருந்து பறந்த கார்; பெண்மணிக்கு நேர்ந்த விபத்...
திருப்பத்தூா் நகர காவல் நிலையத்துக்கு விருது: எஸ்.பி. வழங்கினாா்
திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக திருப்பத்தூா் நகர காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பல்வேறு நடைமுறைகளில் சிறப்பாக செயல்பட்ட சிறந்த காவல் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டிருந்தன.
அதையொட்டி திருப்பத்தூா் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூா் நகர காவல் நிலையம் மாவட்டத்தின் சிறந்த காவல் நிலையமாக தோ்வு செய்யப்பட்டது. மேலும், அதற்கான முதல்வா் கேடயத்தை சென்னையில் உள்ள தலைமை இயக்குநா் அலுவலகத்தில் தமிழக காவல்துறை இயக்குனா் வெங்கட்ராமன் திருப்பத்தூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் ஜெயலட்சுமிக்கு கேடயம் பரிசாக வழங்கி பாராட்டினாா்.
இதற்காக சிறப்பாக பணியாற்றிய திருப்பத்தூா் டிஎஸ்பி சௌமியா, நகர காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமியை எஸ்.பி வி.சியாமளா தேவி திங்கள்கிழமை காவல் அலுவலகத்துக்கு அழைத்து பாராட்டினாா்.