மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் -கட்டடங்களில் விரிசல்; மக்கள் பீதி
திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா கொடியேற்றம்!
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெரு விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினர். அங்குச் சுப்பிரமணிய சுவாமி முன்னிலையில் பங்குனி பெருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக கொடிமரத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மா இலை, தர்ப்பைப்புல், பூ, குங்குமம் சந்தனம் கொண்டு தங்கம் முலாம் பூசப்பட்ட கொடிக் கம்பம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சுப்பிரமணியர் தெய்வானையுடன் காலை தங்கப் பல்லக்கிலும், மாலை தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், வெள்ளி யானை வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக 16ம் தேதி சூரசம்ஹார லீலையும், தொடர்ந்து 17ம் தேதி மாலை சுப்பிரமணியருக்குப் பட்டாபிஷேகமும், 18ஆம் தேதி சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். 19ம் தேதி காலை 6 மணி அளவில் கிரிவலம் வீதிகள் வழியாகத் தேரோட்டம் நடைபெறும்.