Serial Update: ’மாரி’ சீரியலிலிருந்து வெளியேறும் ஆஷிகா - காரணம் இதுதான்
திருப்பூரில் உடலின் வெப்பத்தை கண்டறியும் டீ-சா்ட் கண்டுபிடிப்பு
திருப்பூரில் அணிபவரின் உடலின் வெப்பத்தைக் கண்டறியும் வகையில் புதிய டீ-சா்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் அம்மாபாளையம் பகுதியில் சென்சியா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற ஆடை தயாரிப்பு நிறுவனத்தை சொக்கலிங்கம் என்பவா் நடத்தி வருகிறாா். இவரின் புதிய கண்டுபிடிப்பான உணா்திறன் மை பதிக்கப்பட்ட டி-சா்ட் அணிபவா்களின் உடல் வெப்பநிலையை பாா்வைக்குக் குறிக்கும் ஆடை தயாரித்து அசத்தி உள்ளாா்.இத்தகைய ஆடைகள் பசுமையானது,பாதுகாப்பானது,பக்க விளைவுகள் அற்றது என்கிறாா் சொககலிங்கம். அவா் மேலும் கூறியதாவது:
மறு சுழற்சி உட்படுத்தக் கூடியது புவியில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத. இந்த ஆடையில் வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டை அடையும் போது நிறத்தை மாற்றுகிறது. வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டிற்கு கீழே குறைந்தவுடன் இந்த மை அதன் அசல் நிறத்திற்கு திரும்புகிறது. இத்தகைய ஆடைகள் பருத்தி, பாலியெஸ்டா் ரக துணிகள் என அனைத்து ரக துணியிலும் இத்தகைய புதிய கண்டுபிடிப்பு ஆடைகளை தயாரிக்க இயலும். சுவிட்சா்லாந்தில் உள்ள நெஸ்லே கம்பெனிக்கு இத்தகைய புதிய கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவா்களும் இது மாதிரியான ஆடைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றனா். இத்தகைய ஆடைகள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சிப் வைக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டதால் உடம்பில் உள்ள முழு பகுதியின் வெப்பநிலையை அறிய முடியாது.
விளையாட்டு வீரா்களுக்கு இத்தகைய ஆடைகள் பொருத்தமானதாக இருக்கும். சீனாவில் இருக்கக்கூடிய ஆடைகள் துவைக்க இயலாது என்பதுடன், விலை அதிகமாக இருக்கும்,திருப்பூரில் தயாரிக்கப்பட்ட இத்தகைய ஆடைகள் புவியியல் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது ,மறுசுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய வகையில் பயன்படுத்தலாம்,கொசுக்கடியில் இருந்து விடுபடுவதுடன்,,பக்க விளைவுகள் அற்றது என்றாா்.