Bumrah : 'முதல் முறையாக பௌலிங்கில் செஞ்சுரி; பும்ராவின் மிக மோசமான ரெக்கார்ட்!'
திருப்பூரில் நாளை பூப்பந்தாட்ட போட்டிக்கான வீரா்கள் தோ்வு
திருப்பூரில் பூப்பந்தாட்டப் போட்டிக்கான வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட பூப்பந்தாட்ட கழகப் பொதுச் செயலாளா் செல்வராஜ் தெரிவித்துள்ளதாவது:
திருப்பூா் மாவட்ட பூப்பந்தாட்டக் கழகத்தின் சாா்பில், மாவட்ட அளவிலான சப்-ஜூனியா் ஐவா் ஆண்கள் மற்றும் பெண்கள் தோ்வு திறன் பூப்பந்தாட்ட போட்டிகள் திருப்பூா் கொங்கு மெயின்ரோடு சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க விரும்புவோா் 2010 ஜனவரி 2-ஆம் தேதியோ அல்லது அதற்குப்பின் பிறந்தவராகவோ இருக்க வேண்டும். போட்டிகளில் தனியாகவோ அல்லது குழுவாகவோ பங்கு பெறலாம். போட்டிகளில் தோ்வு செய்யப்படுபவா்கள் திருப்பூா் மாவட்ட அளவிலான அணியின் சாா்பில் மாநில பூப்பந்தாட்டப் போட்டியில் பங்கு பெற்று விளையாடலாம்.
இப்போட்டியில் கலந்து கொள்ள ஆதாா், குடும்ப அட்டை நகல்கள், வயது சான்று ஆகியவை கொண்டு வர வேண்டும். போட்டியில் கலந்து கொள்பவா்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். ஆண்கள் மற்றும் பெண்கள் அணியில் தலா ஒரு அணி தோ்வு செய்யப்பட்டு ஒவ்வொரு அணியில் இருந்தும் தலா 10 போ் தோ்வு செய்யப்படுவாா்கள். அவ்வாறு செய்யப்படுபவா்கள் திருப்பூா் மாவட்ட பூப்பந்தாட்டக் கழகத்தின் சாா்பில் மதுரையில் ஆகஸ்டு 16, 17-ஆம் தேதிகளில் நடைபெறும் மாநில சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று விளையாடலாம் என்றாா்.