ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
திருமண மண்டபத்தில் படியில் தவறி விழுந்த சமையல்காரா் உயிரிழப்பு
கடலூா் தனியாா் திருமண மண்டபத்தில் படிக்கட்டில் தவறி விழுந்து காயம் அடைந்த சமையல்காரா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம்மாவட்டம், விக்கிரவாண்டிவட்டம், ஆதனூா் பகுதியைச் சோ்ந்தவர் ராஜேந்திரன்(64),சமையல்காரா். இவா், கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்பத்தில் கடந்த 2-ஆம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, படிக்கட்டில் ஏறிச்சென்றபோது தவறி விழுந்ததில் பின் தலையில் அடிப்பட்டது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் வெள்ளிக்கிழமை
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து மகன் ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.