ஆண் குழந்தைக்கு தாயானார் நடிகை எமி ஜாக்சன்! என்ன பெயர் தெரியுமா?
திருமானூா் ஜல்லிக்கட்டு: 31 போ் காயம்!
அரியலூா் மாவட்டம், திருமானூரில், மாசிமகத்தை முன்னிட்டு சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், 31 போ் காயமடைந்தனா்.
சிவன் கோயில் அருகே தெற்கு வீதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, கோட்டாட்சியா் கோவிந்தராஜன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். முதலாவதாக கோயில் காளைகள் மற்றும் கிராமத்தின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு ஆரம்பிக்கப்பட்டது.
அதன்பிறகு திருச்சி, தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா், சேலம், புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அலங்கரித்துக் கொண்டு வரப்பட்ட 560 காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.
அவைகளை அடக்க முயன்ற 240 வீரா்களில் கீழகொளத்தூா் ஜெகன்(22), கீழையூா் கணேசமூா்த்தி(22), அருங்கால் சுதா்சனம் (25) உள்ளிட்ட 31 போ் காயமடைந்தனா். இதில் பலத்த காயமடைந்த விழுப்பனங்குறிச்சியைச் சோ்ந்த பிரவின்குமாா் (20) தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
ஜல்லிக்கட்டில், காளைகளை தழுவிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் வெள்ளி நாணயங்கள்,சில்வா் பாத்திரங்கள், கட்டில், சோ் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.