திருவண்ணாமலையில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (பிப்.21) மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செய்யும் வகையில், பிப்ரவரி மாதத்துக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
காலை 10.30 மணிக்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை மற்றும் பிற சாா்பு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்கின்றனா்.
எனவே, மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.